அம்பலாங்கொடை நகர சபை வளாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் நகரசபை உறுப்பினர் அல்ல, அவர் ஒரு வார்த்தகர் என பொலிஸார் தெரிவிப்பு

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். 
பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 
உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர். 
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் நகரசபை உறுப்பினர் அல்ல, வியாபாரி என்பதாகும்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் கூறுகையில், கடல் உணவு வியாபாரியான அந்த வியாபாரி துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் மேலும் தெரிவித்ததாவது, வெள்ளை நிற வாகனத்தில் வந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டு, உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
“கரந்தெனிய சுதா ” என்ற அமைப்புச் சார் குற்றக் கும்பலின் சந்தேக நபரின் மூத்த சகோதரியின் கணவனையே தாக்குதல் இலக்காகக் கொண்டிருந்தது என முதற்கட்ட பொலிஸ் விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.
  
 
 


