News
போதைக்கு எதிரான போரில் களமிறங்கிய கலாநிதி ஹிஸ்புல்லாஹ் – இனம், மதம், கட்சி வேதங்கள் இன்றி அனைவரும் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

“அரசியல் பேதமின்றி முழு நாடும் ஒன்றிணைந்து போதைக்கு எதிரான இப்போரில் வெற்றி காண வேண்டும். இது தேசத்தின் கடமை!
போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது நமது இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் சமூக கட்டமைப்பையும் சிதைக்கும் ஒரு தேசியப் பேரழிவாகும்.
இதற்காக, இனம், மதம், மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கப்பால்  அனைத்து மக்களும், அரசும், பாதுகாப்புப் பிரிவும் இணைந்து செயல்பட்டு, போதைக்கு எதிரான இப் போரை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
 அப்போதுதான், நமது வருங்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான தேசத்தை நாம் உறுதி செய்ய முடியும்.!”
— கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
#Media_Unit
  
 
 


