News
ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் உயர்மட்ட ஆலோசகர் சரித்த ரத்வத்தே, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் நிதி மோசடி தொடர்பில் கைது

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமர் உயர்தர ஆலோசகருமான சரித்த ரத்வத்தே ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரித ரத்வத்தே, 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் உயர்தர ஆலோசகராக பணியாற்றினார்.
நியூஸ்ஃபர்ஸ்ட் செய்தியின்படி, 2015 ஆம் ஆண்டு நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக களஞ்சியசாலை கிடங்குகளை கொள்வனவு செய்த விசாரணை தொடர்பிலேயே இந்த கைது நடந்துள்ளது.
இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தினூடாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த தற்காலிக களஞ்சிய கிடங்குகளுக்கு ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான செலவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
  
 
 


