விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்று திரும்பிய யுவதி, திடீர் உயிரிழப்பு
வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக யுவதியொருவர் நேற்று (25) உயிரிழந்தார்.
நிட்டம்புவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் பணிபுரிந்துவந்த குறித்த யுவதி தனது சக ஊழியர்களுடன் விருந்துபசார நிகழ்வொன்றிற்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய யுவதி திடீர் சுகவீனமடைந்த நிலையில் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வரகாபொல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் வரகாபொல – அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் உயிரிழந்த யுவதியின் பிரேதப் பரிசோதனை நேற்று மாலை கேகாலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.