News
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டு அபராதம் விதிப்பு
தேர்தல் சட்டத்தை மீறி தேசிய மக்கள் சக்தி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டிய கட்சியின் ஆதரவாளர்கள் இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் தேசிய மக்கள் சக்தி தலைவரின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதவான் திலின கமகே இருவருக்கும் தலா 1500 ரூபா அபராதம் விதித்தார்.
சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி அபராதம் விதித்தமை குறிப்பிடத்தக்கது