News

Y குரோமோசோம்  மறைந்து போக வாய்ப்புள்ளதால், ஆண் இனமே அழிந்து போக உள்ளதாக உயிரியலாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோம்கள்’ மறைந்து வருவதாக ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் எல்லாவற்றிலும் மாற்றமடைந்து பெரும் முன்னேற்றத்தை சந்திக்கும் போது மனிதர்களில் உள்ள இரண்டு பாலின குரோமோசோம்களில் ஒன்றான ‘Y குரோமோசோம்’  மறைந்து போக வாய்ப்புள்ளது என்பதை உயிரியலாளர்கள் ஆய்வின் மூலம் அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த குரோமோசோமின் முழுமையான மறைவு என்பது எதிர்காலத்தில் ஆண் சந்ததியின் முடிவைக் குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அப்படி முழுமையாக நாம் நம்பத் தேவையில்லை, அவற்றில் சில நம்பிக்கைகளும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, புகழ்பெற்ற மரபியல் பேராசிரியர் ஜெனிஃபர் ஏ.மார்ஷல் கிரேவ்ஸ், “கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில், அதன் அசல் 1,438 மரபணுக்களில் 1,393 ஐ இழந்துவிட்டது, 45 மரபணுக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் ‘Y குரோமோசோமின்’ நேரம் முடிந்துவிட்டதாகவும் இந்த போக்கு தொடர்ந்தால், அவை 11 மில்லியன் ஆண்டுகளுக்குள் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் இது ஆண் சந்ததியின் எதிர்காலம் மற்றும் மனித உயிர்வாழ்வு பற்றிய அச்சத்தை எழுப்புவதாகவும் ஜெனிஃபர் ஏ.மார்ஷல் கவலை தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button