News
ஆடைகள் இன்றி ஆற்றில் மிதந்துவந்த சடலம் மீட்பு

அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அத்தனகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



