கடதாசி யுகத்திலிருந்து டிஜிட்டல் யுகத்துக்கு மாறுவோம்.
❌Passport Paper இல்லை
❌Birth Certificate Paper இல்லை
❌Death Certificate Paper இல்லை
❌Exam Paper இல்லை
❌Results Paper இல்லை
❌Light bill paper இல்லை
❌Water bill paper இல்லை
❌Library card paper இல்லை
❌Train Ticket paper இல்லை
❌Ballot paper இல்லை
என நாளுக்கு நாள் “රට ගොඩ” ஆகிக் கொண்டு செல்கிறது? இது எங்க போய் நிற்குமோ என்று ‘මහ ජනතාව’ யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்..
இதே நேரம் உலகில் அச்சிட்டு வெளியிடப்பட்டுக்கொண்டிருந்த செய்திப் பத்திரிகைகள் (News Papers) கடந்த 15 ஆண்டுகளில் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், மக்கள் செய்திகளை பெற்றுக்கொள்ள இணையதளங்கள், சோசியல் மீடியா மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளான செய்தித் தாள், ஆடியோ, வீடியோ பக்கம் திரும்பியுள்ளதாகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் அமெரிக்காவில் அச்சிடப்பட்ட அனைத்து செய்தித்தாள்களும் மறைந்துவிடும் எனவும், அடுத்த பத்தாண்டுகளில் தினசரி அச்சிடப்படும் செய்தித்தாள்கள் உலகில் இருந்து மறைந்துவிடும் எனவும் தகவல்கள் காட்டுகின்றன.
ஐரோப்பா ஒன்றியம் இவ்வருடம் நவம்பர் 10 ஆம் திகதி முதல் Schengen நாடுகளுக்கான Electronic Entry விஸாவை அறிமுகம் செய்கிறது. இது பாரம்பரிய ‘பேப்பர் ஸ்டிக்கர் விஸா’ க்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இத்துடன் விஸா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக Schengen நாடுகளுக்கிடையே ஒருங்கிணைக்கப்பட்ட Online application முறையும் செயலுக்கு வருகிறது.
பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில், வெளி நாடுகளில் வாழும் இலங்கையர்களது Civil ID, Driving License, Vehicle License, Medical Insurance உட்பட அனைத்து Biometric தகவல்களும் தத்தமது மொபைல் போனுக்குள் அடங்கி விட்டன. அதே போல் சம்பளம், கொடுக்கல் வாங்கல், வங்கிக் கணக்குகள், பாடசாலை, வைத்தியசாலை, ஏனைய நியமனங்கள், விண்ணப்பங்கள், அறிக்கைகள், மின் கட்டணம், நீர் கட்டணம், டெலிபோன் கட்டணம், பாடசாலை கட்டணம், அபராத கட்டணம் போன்ற அனைத்துமே பல ஆண்டுகளாக Electronic முறையிலேயே நடைபெறுகின்றன.
இப்படி முழு உலகமும் பாரம்பரிய பேப்பர் ஆவணங்களை டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி எழுத வேறொரு கட்டுரை தேவை.
எமது பக்கத்து நாடு 50 வருடத்துக்கு முன்பே தமது சொந்த Satellite ஐ தயாரித்து இப்போது சந்திரனில், சூரியனில், வேற்றுக் கிரகங்களில் கால் பதித்து ஏனைய உலக நாடுகளுடன் Space Race ஓடிக்கொண்டிருக்கும் அதே சமயம், நாம் தேர்தலில் வெற்றி பெற்றால் உங்களுக்கு Satellite தருவோம் என்று கடந்த 10 வருடங்களாக மேடைகளில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் நம்ம தலைவர்கள்!
இந்த ஜனாதிபதி தேர்தலில் வரும் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயினும் எமது இளம் சமூகத்தை, மாணவ மாணவிகளை இந்த Electronic Era வின் முன்னோடிகளாக மாற்ற இப்போதே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இவ்விடயத்தை புகுத்திக்கொள்ள வேண்டும்.
ஹரீஸ் ஸாலிஹ்
30.08.2024