நாமல் ராஜபக்ஷவால் இலகுவாக வென்று ஜனாதிபதியாக முடியும் – அவர் 35 சதவீத வாக்குகளை கைவசம் வைத்துக்கொண்டே தேர்தல் பிரச்சாரத்தை ஆற்பித்தார்.
மஹிந்த சிந்தனைக் கொள்கையுடன் இருக்கும் மக்களின் 35 சதவீத வாக்குகளைப் பெற்று தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இலகுவாக ஜனாதிபதியாக முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று தெரிவித்துள்ளார்.
இம்முறை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என்றும், 35 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இம்முறை 50 வீதத்திற்கு மேல் எவராலும் பெற முடியாது. ஆரம்பத்தில் நான்கு அரசியல் கட்சிகள் களமிறங்கி, அது தற்போது மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ச மற்றும் இரண்டு வேட்பாளர்கள் இப்போது களத்தில் உள்ளனர். மூன்று வேட்பாளர்களும் 80 சதவீதத்தைப் பெறுவார்கள். நான்காவது வேட்பாளருக்கும் 15 வீதமும், ஏனைய வேட்பாளர்கள் 5 வீதமும் பெற்றுக் கொள்வார்கள் எனில், 35 வீதமான வாக்குகளைப் பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்ட முடியும் ‘மஹிந்த சிந்தனை’ கொள்கையில் அவர் இன்னும் 4 முதல் 5 லட்சம் வரை பெறலாம் என, டலஸ் அலகப்பெரும கூறியதாக, அவர் கூறினார்.