News

அனர்த்தம் ஏற்பட்ட போது கம்பளை பகுதிக்கு இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் அனைத்து அமைப்புக்களில் இருந்தும் சுமார் 7480 பேர் வரை சுத்திகரிப்புப் பணிகளுக்காக வருகை தந்தனர்… பஸ்மின் ஷரீப் M.P யின் ‘JVP பொடியன்மார்’ உரைக்கு கம்பளை முஸ்லிம் கவுன்சில் பதில்


ஊடக அறிக்கை (Press Release)
கடந்த 08.01.2026 அன்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்-ஹாஜ் பஸ்மின் ஷரீப் அவர்களின் பாராளுமன்ற உரை தொடர்பாக..

மேற்படி தினத்தன்று தனது பாராளுமன்ற உரையில், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கட்சிகளை மாத்திரம் மிகைப்படுத்தி அவர்கள் மட்டும் தான் கம்பளை நகரை சுத்தம் செய்ய உதவினார்கள் என்ற கருத்தையொத்த வார்த்தைகள் பலரின் உள்ளங்களைப் புண்படுத்தி இருப்பதாக எமக்கு அறியக் கிடைத்தது என்பதை மிகக் கவலையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.


அனர்த்தத்தின் பின்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கௌரவ பஸ்மின் ஹாஜியார் அவர்கள் உட்பட ஏனைய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இங்கு எம்மைச் சந்தித்து உரையாடியதை நாம் இங்கு நன்றியுடன் ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இவர்கள் எவரையும் கம்பளை வாழ் மக்கள் கட்சி இயக்கம் போன்ற பிரிவினைக் கண்கொண்டு பார்க்கவில்லை. 

மனிதாபிமான ரீதியில் மக்கள் பணியில் ஈடுபட்டார் என்றே கண்டோம்.
இந்த அடிப்படையில் எமது அனர்த்த நிவாரண நிலையத்துடன் இணைந்து 27.11.2025 ஆம் திகதி முதல் 27.12.2025 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் சுமார் 7480 பேர்கள் வரை சுத்திகரிப்புப் பணிகளுக்காக வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமாவின் மாவட்ட பிரதேசக் கிளைகள், பள்ளி வாசல் மற்றும் வர்த்தக சம்மேளனங்கள், இஸ்லாமிய தொண்டர் மற்றும் தஃவா அமைப்புக்கள், தரீக்கா ஸாவியாக்களின் இக்வான்கள் முரீதுகள் என பலரும் வருகை தந்து எவ்வித அமைப்பு அடையாளங்களுமின்றி மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டனர். 

அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எமது கம்பளை வாழ் மக்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொறுப்பான இடத்தில் பொறுப்பான ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது மிகக் கவனமான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிப்பது மிக முக்கியம் என்பதை இத்தருணத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் இதனைத் திருத்தி ஹன்சாட்டிலிருந்து இந்தப் வார்த்தைப் பிரயோகத்தை நீக்கக் கோருமாறும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் பஸ்மின் ஷரீப் அவர்களை கம்பளை வாழ் மக்கள் சார்பாக மிக வினயமாக கம்பளை முஸ்லிம் கவுன்சில் வேண்டிக் கொள்கிறது. 

எதிர்காலத்தில் பொதுமக்கள் கவலையடையும் இப்படியான வார்த்தைப் பிரயோகங்களை பாவிக்க மாட்டார் எனவும் நாம் நம்புகிறோம்!
இவ்வண்ணம்,
(Signature)
அல்-ஹாஜ் பி.எம்.எம்.காமில்
செயலாளர் – கம்பளை முஸ்லிம் கவுன்சில்
RELIEF COORDINATING CENTRE – 2025
GAMPOLA TOWN MASJID CULTURAL HALL, 148 Ambagamuwa Road, Gampola.
Contact Numbers:
+94 77 466 6634 / +94 77 444 2977 / +94 77 349 2133 / +94 71 446 7527 / +94 77 739 8357 / +94 77 922 7744 / +94 77 305 0165 / +94 70 780 1621
* Al-Haj J.M.Nizar (President)
* Al-Haj P.M.M.Kamil Rtd. Principal (Secretary)
* Al-Haj Azeem Akbar (Treasurer)
Affiliated Organizations:
* All Ceylon Jamiyyathul Ulama – Gampola Branch
* Gampola Masjids Federation
* Gampola Business Federation
* Gampola All Civil, Dawah & Youth Moments

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button