News

நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசம் ..

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மிச்சிகனில் நடந்த குடியரசுக் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், “அமெரிக்காவிற்கு அதிக குழந்தைகள் வேண்டும். நான் 2 ஆவது முறையாக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

மேலும், இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை அரசு அல்லது மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Recent Articles

Back to top button