News
தன்னுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்த மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கணவன் கைது – படுகாயமடைந்த மனைவி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதி
பதுளை – ஹிந்தகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (31) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது கணவருடன் ஏற்பட்ட தொடர் வாக்குவாதத்தையடுத்து குறித்த பெண்ணின் கணவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்