News

நாட்டில் இனவாதம் இல்லாத சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்குவோம் ; சஜித் தெரிவிப்பு

இனவாதம் இல்லாத சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்கும் பொறுப்பை தாங்கள் ஏற்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் நாச்சியாதீவு நகரில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் 29ஆவது பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எரிப்பதா? நல்லடக்கம் செய்வதா? என்கின்ற பிரச்சினை எழுந்தது.

அதன்போது, மக்களுடைய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மத, கலாசார, மக்களுடைய பண்பாட்டு விடயங்களை மறந்து தனிப்பட்ட இலாபத்திற்காகவும், வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் செயற்பட்டனர்.

அவர்கள் மதத்தையும், அறத்தையும், சுய கௌரவத்தையும் காட்டிக் கொடுத்து, இனவாதத்தைத் தூண்டியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும், இனமத பேதங்களையும் ஊக்குவிக்கின்ற யுகத்தை இல்லாமல் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களும் இந்த மோசமான அரசாங்கத்தினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சுபீட்சமான வாழ்க்கையை உருவாக்குகின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், வேறொருவர் கைகாட்டும் வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணான வாக்குகளாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button