13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன் ; யாழ்பாணத்தில் சஜித்
அரசியல் யாப்பில் உள்ளவாறாக 13 வது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு மாகாண சபைகள் வலுப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று காலை ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது அரசியல்- பொருளாதார நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று உறுதியாகத் தெரிவிக்கும் ஒரேயொரு வேட்பாளர் நான் மட்டுமே.
ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றி நிச்சயமானது.மேலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி அரசாங்கத்தை அமைப்பது உறுதி.
அதேவேளை, 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டியது நாட்டின் எதிர்கால சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும் அவசியமானதாகும்.
அது தேர்தலுக்கான வெறும் அரசியல் கோசம் அல்லவென்றும் அது தான் தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினால் எடுக்கப்படும் முடிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.