News

பாகிஸ்தானின் உயர்தர காளைகளின் விந்தணுக்களை இலங்கையிலுள்ள உள்ளூர் மாடுகளுக்கு செலுத்தி சினைப்படுத்தி இங்குள்ள மாடுகளின் இனத்தரத்தை உயர்த்தும் நோக்கில், பாகிஸ்தானிலிருந்து உயர்தர காளைகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, பாகிஸ்தானிலிருந்து உயர்தர ‘சாஹிவால்’ (Sahiwal) இனக் காளைகள் செவ்வாய்க்கிழமை (03) அன்று இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.

இலங்கையின் கால்நடை வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான கால்நடை வளர்ப்பு உறவில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

உலகளவில் புகழ்பெற்ற இந்த சாஹிவால் மாடுகள், அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியவை மற்றும் நோய்களை எதிர்க்கும் பலம் கொண்டவையாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இவற்றின் பசு மாடுகள் அதிக பால் கொடுக்கும் திறன் கொண்டவை. இந்த காளைகள் மூலம் உயர்தர விந்தணுக்களைப் பெற்று, அவற்றை இலங்கையிலுள்ள உள்ளூர் மாடுகளுக்கு செயற்கை சினைப்படுத்தல் மூலம் செலுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலங்கையிலுள்ள மாடுகளின் இனத் தரம் உயர்வதோடு, பாலின் அளவும் பெருமளவில் அதிகரிக்கும்.

வெளிநாடுகளிலிருந்து அதிக விலைக்கு பால் பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும். இந்தத் திட்டத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானம் உயரும் என்பதோடு, நாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பும் பொருளாதார நிலையும் வலுப்பெறும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button