News

மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதால், மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் ; அத்தாவுல்லாஹ்

(ஏ.எல்.நிப்றாஸ்)

நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம்.

இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அக்கரைப்பற்றில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய மேயர் அதாவுல்லா மேலும் கூறுகையில்

இலங்கையின் வளங்களை கொள்ளையிடுவதற்காக காலனித்துவாதிகள் நாட்டுக்குள் வந்தனர். மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு போராடி சுதந்திரத்தை பெற்றோம்.

ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகும் இலங்கையின் வளங்கள் மீது வெளிநாட்டுச் சக்திகள் குறியாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இலங்கை தன்னகத்தே எல்லா வளங்களையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் எல்லாவற்றுக்கும் கையேந்துகின்ற பாணியிலான ஒரு பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. நமது வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு, உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்போது மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சர் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே யுத்தமொன்று ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து உச்சபட்ச பலனைப் பெறுவதற்கு இரு மொழிகளை பேசும் நான்கு இன மக்களும் முன்னிற்க வேண்டும். மிக முக்கியமாக இன விகிதாரசத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் இனிமேலாவது பகிரப்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தின் பரிணாமங்களை உணர்வார்கள் என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button