சடலத்துடன் சவப்பெட்டியை வைத்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
வவுனியா மஹாகச்சிக்கொடிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதையடுத்து பாதுகாப்பு கோரி மகாகச்சிக்கொடிய கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டு யானைகளின் தாக்குதலால் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை (02) மாலையில் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளும் முன்னரே மகாகச்சக்கொடிய பிரதான வீதியை மறித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக இடத்திற்கு வந்த பொலிஸார் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரத்தில் மஹாகச்சக்கொடிய, பிரப்பம்மதுவ பிரதேசத்திலும், சலாலிஹினிகம பிரதேசத்திலும் காட்டு யானைகளின் தாக்குதலினால் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், வனவிலங்கு அதிகாரிகளோ அல்லது அரச அதிகாரிகளோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வரவழைக்கப்பட்டு அருகிலுள்ள காப்புக்காடுகளில் விடப்படுவதால் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து கிராமங்களுக்குள் நுழைவதாகவும், உடனடியாக கிராமங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கிராம மக்கள் மேலும் தெரிவித்தனர். யானை வேலி அல்லது காட்டு யானைகளை விரட்ட.