News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவலப்பிட்டிய தொகுதி இளைஞர் அமைப்பாளராக யூனுஸ் ராசிக் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாவலப்பிட்டிய தொகுதி இளைஞர் அமைப்பாளராக என்னை தேர்வு செய்து நியமித்த மதிப்பிற்குரிய கட்சி தலைவர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்  என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாவலப்பிட்டிய தொகுதி இளைஞர் அமைப்பாளராக தெரிவான யூனுஸ் ராசிக் தெரிவித்தார்.

அதேபோல், எனக்கு முழுமையான ஆதரவு வழங்கி, ஊக்கம் அளித்து, நம்பிக்கை வைத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்ததுடன்

நாவலப்பிட்டிய தொகுதியிலுள்ள இளைஞர்களை ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தலைமைத் திறன் கொண்ட சமூகப் பொறுப்புள்ள தலைமுறையாக உருவாக்கி, கட்சியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வலுவான இளைஞர் இயக்கமாக கட்டியெழுப்புவதே தனது தூர நோக்கு எனவும்,  அதனை நடைமுறைப்படுத்தும் பணிக்கோளாக, இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கல்வி, தொழில் திறன், சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் பங்கேற்பை மேம்படுத்தி, கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை அடித்தள மட்டத்தில் கொண்டு சென்று, செயல்மிக்கவும் ஒற்றுமையானதும் பொறுப்புணர்வுள்ளதும் ஆன இளைஞர் அமைப்பை உருவாக்குவதற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button