புத்தளத்தின் ஓரத்தில்
சத்தமில்லாமல் அழும் ஒரு வீடு

#அமைதியாக_அழும்_ஒரு_வீடு
புத்தளத்தின் ஓரத்தில்
சத்தமில்லாமல் அழும் ஒரு வீடு இருக்கிறது.
அந்த வீட்டில் ஒருகாலத்தில் சிரிப்பு இருந்தது.
ஒரு அப்பாவின் குரல் இருந்தது.
“என் பிள்ளைகள் நன்றாக வாழணும்” என்ற
ஒரு சாதாரண மனிதனின் பெரிய கனவு இருந்தது.
அவர் ஒரு வாடகை ஆட்டோ ஓட்டுநர்.
மழையிலும் வெயிலிலும் ஓடி சம்பாதித்தார்.
தன் சோர்வை வீட்டின் வாசலில் விட்டுவிட்டு
மகள்களின் சிரிப்பை மட்டும் உள்ளே எடுத்துச் செல்வார்.
ஆனால் வாழ்க்கை
அந்த வீட்டை மெதுவாக சோதிக்கத் தொடங்கியது.
முதலில்
அந்த வீட்டின் அம்மா நோய்வாய்ப்பட்டார்.
நீரிழிவு… சிறுநீரக பிரச்சினை…
மருத்துவமனை படுக்கை
அவரின் இரண்டாவது வீடாக மாறியது.
மூன்று மகள்கள்
அம்மாவை சுற்றி நின்றார்கள்.
அவர்கள் வயதில் இருக்க வேண்டியது
பாடப்புத்தகங்களுடன்.
ஆனால் அவர்கள் கற்றது
மருந்து நேரங்களையும் டாக்டர் வார்த்தைகளையும்.
அதில் ஒரு மகள்,
தன் வலியை மறைத்து
தாயின் கையை பிடித்துக் காத்திருந்தாள்.
ஒருநாள்
அவள் சொன்னாள்:அம்மா
“விலாப்பக்கத்தில் வலி…தாங்க முடியவில்லை…”
அந்த ஒரு சொல்
அந்த குடும்பத்தின் உலகத்தை உடைத்தது.
ஆம் அவளுக்கு புற்றுநோய்.
அதுவும் நான்காம் நிலை.
தாய் ஒரு படுக்கையில்.
மகள் மற்றொரு படுக்கையில்.
மருத்துவமனை சுவர்கள்
அவர்களின் கண்ணீரை பார்த்து அழுது கொண்டிருந்தது.
இவை எல்லாம் நடக்கும்போது
அந்த அப்பா
அமைதியாக நெஞ்சு வலியை தாங்கிக் கொண்டிருந்தார்.
“இப்போ நான் என்னட ஒடம்ப பாத்துக்கிட்டா
என் குடும்பத்தை யார் பாத்துக்குவாங்க?”
என்று எண்ணியிருப்பார்.
டாக்டர் சொன்ன அத்தனை பரிசோதனைகளும்
பின்னோக்கி தள்ளப்பட்டன அந்த ஏழை ஆட்டோ ஓட்டினரிற்கு
குடும்பத்தின் துயரம் மட்டுமே முன்னிலையிலிருந்தது….
ஒரு நாள்
அவர் விழுந்தார்.
மீண்டும் எழவே இல்லை.
அந்த வீட்டின் தூண்
அமைதியாக இடிந்து விழுந்தது.
இப்போது…..
அம்மா
கண் பார்வை இழந்த நிலையிலும்
விதவை கடமையில்.
ஒரு மகள்
புற்றுநோயுடன் போராடுகிறாள்.
மற்றொரு மகள்
தன் உடல்நிலை பற்றிய பயத்தில்.
இளைய மகள்
பள்ளி புத்தகத்தை திறந்தாலும்
மனம் மருத்துவமனையில்தான்.
அவர்கள் கேட்பது
ஆடம்பரம் அல்ல.
வாழ ஒரு வாய்ப்பு மட்டும்.
ஒரு நாளுக்கு
ஆயிரம் ரூபாய் கூட
அவர்களுக்கு பெரிய விஷயம்.
இது ஒரு கதை அல்ல.
யாரோ எழுதும் நாவல் அல்ல.
இது ஒரு வீட்டின் உண்மையான அழுகை.
⸻
#இது_கதை_அல்ல… இது உண்மை…*
இது நடக்கிறது.
இப்போது.
நம்மைச் சுற்றியே.
அதுவும் புத்தளத்திலேயே!
தந்தை: புத்தளத்தில் பிறந்து, தில்லையடியில் வசித்து அண்மையில் மௌத்தாகியவர்.
மூத்த மகள்: #ஆசிரா – பரிசோதனையில் (முதுகு பகுதியில் கட்டியொன்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது)
இரண்டாவது மகள்: #சதா – கடுமையான புற்றுநோயுடன் (4ம் நிலை) போராடுகிறார்.
இளைய மகள்: பதினொராம் ஆண்டு மாணவி
தாய்: கடுமையான உடல்நிலை பிரச்சினையுடன்
உங்கள் ஒரு ஒரு உதவி
ஒரு குடும்பத்தின் இருளில்
ஒரு விளக்காக மாறலாம்.
#எல்லாம்_வல்ல_இறைவன் உங்கள் வாழ்க்கையை உயர்வடையச் செய்யட்டும்…
M.A.Aseera (மூத்த மகள்)
Account number. 94916870
BOC Bank
Puttalam Branch உதவி செய்பவர்கள் தாயாரின் தொடர்பு இலக்கத்திற்கு தெரிவிக்கவும் 0767512107



