News

கனடாவில் பாடசாலையில்
துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றவர், ஒரு ஆணாகப் பிறந்து
பெண்ணாக மாறியவர் ஆவார்

கனடா பாடசாலை ஒன்றில் துப்பாக்கியால் சுட்டு 6 பேர்களை கொலை செய்தவர், சொந்த தாயார் மற்றும் சகோதரரையும் படுகொலை செய்துள்ளதை கனடா பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர் 18 வயதுடைய Jesse Van Rootselaar என்றும், அவர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாடசாலையை விட்டு வெளியேறியவர் என்றும் தெரியவந்துள்ளது.


கனடாவில் பாடசாலையில்
தாக்குதலில் ஈடுபட்டவர் பெண்
சந்தேக நபர் ஒரு ஆணாகப் பிறந்து சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாறியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



அதனாலையே, தாக்குதலில் ஈடுபட்டவர் பெண் என அறிவித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

பலியானவர்களில் 12 முதல் 13 வயதுக்குட்பட்ட ஐந்து மாணவர்களும், சந்தேக நபரின் 11 வயது வளர்ப்பு சகோதரனும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.


மேலும், செவ்வாய்க்கிழமை மதியம் மேல்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, வான் ரூட்ஸீலார் தனது தாயார் ஜெனிஃபர் மற்றும் சகோதரர் எம்மெட்டை அவர்களது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அவரது மனநலம் தொடர்பாக பல ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு சென்று விசாரணை முன்னெடுத்து வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம், கனடாவில் பாடசாலைகளில் நடந்த இரண்டாவது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து இன்றையதினம்(12)வியாழக்கிழமை அங்கு துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button