News

நாட்டில் மீண்டும் இனவாதம் தூண்டப்படுகிறது என மொட்டுக்கட்சியின் முன்னாள் ஆளுநர் குற்றம் சாட்டுகிறார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் படுகொலை தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது, நாட்டு மக்கள் நீதிமன்றத்திடம் இருந்து எதிர்பார்த்த ஒரு நீதியான தீர்வாகும் என முன்னாள் ஆளுநர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.



பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இந்தத் தீர்ப்பின் ஊடாக நாட்டில் சட்டம் இன்னும் சீரழியவில்லை என்ற வலுவான செய்தி சமூகத்திற்குச் சொல்லப்பட்டுள்ளது.



அத்துடன், வன்முறையைத் தூண்டியவர்களுக்கும் மிலேச்சத்தனமாகச் செயற்பட்டவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.



இன்று பாராளுமன்றம் மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகள் ஒரு கேலிக்கூத்தாக மாறியுள்ளது.



கடந்த ஒன்றரை வருட காலத்தில் மக்கள் எதிர்பார்த்த எவ்வித ஆக்கபூர்வமான மாற்றங்களும் நாட்டில் நிகழவில்லை.



நாட்டில் மீண்டும் இனவாதம் தூண்டப்படுகிறது என முன்னாள் ஆளுநர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button