News

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி சிறுமி ஒருவரை தாக்கிக் கொன்ற தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு பொலிசார் வலைவீச்சு .. #இலங்கை

ஹோமாகம, மாகம்மன, சமகி மாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாயின் கள்ளக்காதலன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னை ‘தந்தை’ என்று அழைக்குமாறு வற்புறுத்தி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இச்சிறுமி மீது தாக்குதல்களை நடத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button