News

ரவூப் ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காகவே கண்டியில் மக்கள் காங்கிரஸ் தனது வேட்பாளரை களமிறக்கவில்லை :   ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு

நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தோல்வியடையக் கூடாது என்பதற்காக, கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாமல், சமூக நலனை முன்னிறுத்தி நல்ல முடிவை எடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே வேளையில் நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யக் கூடாது என்ற நோக்கில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று செயல்பட்டு வருவது, நிந்தவூர் மக்களுக்கும் அந்த ஊரின் எதிர்கால அபிவிருத்திக்கும், மக்களின் விருப்பத்திற்கும் எதிரான செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் மேற்பார்வையிலும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி, தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கட்சியினுள் ஒற்றுமையின் அவசியம் குறித்து விரிவாக விளகயிருந்தார்.

குறிப்பாக, யாராக இருந்தாலும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

மேலும், ஒரு அரசியல் கட்சியும் அதன் தலைவரும் சமூகத்தை முன்னிறுத்தி, மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் சிறுபான்மை சமூகத்தை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் அரசியல் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக் ஜவாத், தனது மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தானாகவே விலகுவதாக தலைவர் முன்னிலையில் அறிவித்தார்.

எதிர்காலத்தில் கட்சிக்காக 100 சதவீதம் தனது பங்களிப்பு இருக்கும் என்றும், கட்சியின் நலனும், குறைகளும் குறித்து வெளிப்படையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button