News

ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் மற்றும் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சிக‌ளை ஒழித்துக்கட்டி சமூகத்தை மேலும் பல துரோகங்களில் இருந்து காப்பாற்றுவோம் ; முபாற‌க் முப்தி முஸ்லிம்களிடம் வேண்டுகோள்

ஹக்கீம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக‌
ACMC க‌ண்டியில் வேட்பாளரை நிறுத்தவில்லையாம்.

ரிசாத் ப‌தியுதீன் தெரிவித்துள்ளார்.

ஒரு கால‌த்தில் ஹ‌க்கீம் காங்கிர‌சுக்கு மாற்றீடு ரிசாத் ப‌தியுதீன்  என்றுதான் நான் அவ‌ரை ஆத‌ரித்தேன்.

முழு க‌ல்முனையும் ஹ‌க்கீம் என்றிருந்த‌ 2011ம் ஆண்டு ரிசாத் ப‌தியுதீன் க‌ட்சியில் க‌ள‌மிற‌ங்கி என‌து சொந்த‌ப்ப‌ண‌ம் 12 ல‌ட்ச‌ம், என‌து ச‌கோத‌ர‌ர் அத்னானின் ப‌ண‌ம் 3 ல‌ட்ச‌ம் என‌ செல‌வு செய்து அக்க‌ட்சியை க‌ல்முனையில் அறிமுக‌ப்ப‌டுத்தினேன்.

ரிசாத் ப‌தியுதீன் இந்த‌ ச‌மூக‌த்துக்கான‌ அர‌சிய‌லை முன்னெடுக்க‌ த‌குதி இல்லாத‌வ‌ர் என‌ க‌ண்டு அவ‌ர் அமைச்ச‌ராக‌ இருக்கும் போதே அவ‌ர் க‌ட்சியின் பிர‌தி கொள்கை பர‌ப்பு செய‌லாள‌ர் ப‌த‌வியிலிருந்து ராஜினாமா செய்து மீண்டும் என் சொந்த‌க்க‌ட்சியை கொண்டு சென்றேன்.

இப்போது ஹ‌க்கீமை காப்பாற்ற‌வே ரிசாத் ப‌தியுதீன் க‌ண்டியில் வேட்பாள‌ரை நிறுத்த‌வில்லை என்ற‌ உண்மையை, ச‌மூக‌த்துரோக‌த்தை ப‌கிர‌ங்க‌மாக‌ ஏற்றுக்கொண்டுள்ளார்.


ஹ‌க்கீம் இந்த‌ ச‌மூக‌த்தின் துரோகி என்று தெரிந்து, அவ‌ரால் இந்த‌ ச‌மூக‌த்துக்கு எந்த‌ உரிமையும் கிடைக்க‌ப்போவ‌தில்லை என்ப‌து புரிந்து எம்மை போன்ற‌ ப‌ல‌ர் ஹ‌க்கீமை ச‌மூக‌ம் ஓர‌ங்க‌ட்ட‌ முழு மூச்சும் எடுக்கும்போது ரிசாத் ப‌தியுதீன் ஹ‌க்கீமை காப்பாற்றிய‌த‌ன் மூலம் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு அநியாய‌ம் செய்து விட்டார்.

அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், ஸ்ரீ. முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒழித்து க‌ட்டாவிட்டால் மேலும் மேலும் இந்த‌ ச‌மூக‌ம் இப்ப‌டியான‌ துரோக‌ங்க‌ளையே காணும்.

முபாற‌க் முப்தி
த‌லைவ‌ர்
இல‌ங்கை உல‌மா க‌ட்சி
ஊட‌க‌ பேச்சாள‌ர்
ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button