News
ஜம்மியத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கதீப்மார்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு

ஜம்மியத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கதீப்மார்களுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு நேற்று(17) நடைபெற்றது.
இதில் சிறப்பு வளவாளர்களாக கலந்துகொண்ட பாணந்துறை ஜாமிஆ இப்னு உமர் உயர் கற்கை கலாபீட பிரதி அதிபர் அஷ்ஷேய்க் முப்தி M.F ரியாஸ் (ரஷாதி) “ஒரு சிறந்த குத்பா எவ்வாறு அமைய வேண்டும் எனும் தலைப்பிலும், அக்கரைப்பற்று உம்முதர்தா இஸ்லாமிய மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி M.I.M சித்தீக் (அஸ்ஹரி), “குத்பா மற்றும் மிம்பர் மேடையின் முக்கியத்துவம்” எனும் தலைப்பிலும் ஆலிம்களுக்கு தெளிவுபடுத்தினர்.
இச்செயலமர்வில் ஜம்மியத்துல் உலமா சபையின் பொத்துவில் கிளைத் தலைவர் உள்ளிட்ட ஆலிம்கள், கதீப்மார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






