News
கிண்ணியா அல் மக்தூம் கல்வி நிலைய மாணவர்களின் புனித ரமழான் வரவேற்பு சிறுவர் பேரணி

இர்ஸாத் இமாமுதீன்
கிண்ணியா அல் மக்தூம் கல்வி நிலையத்தின் புனித ரமழான் வரவேற்பு சிறுவர் பேரணி செவ்வாய்க்கிழமை (17) மாலை 4.30 ற்கு மஹரூப் நகர் ரிழ்வானியா ஜும்மாப் பள்ளியில் ஆரம்பித்து க்ரீன் வீதியூடாக மாஞ்சோலை ஜும்மாப் பள்ளியில் முடிவுற்றது.
பெற்றார்கள் புடைசூழ, சிறுவர்களின் ஒலிபெருக்கி ரமழான் வர்ணனை முழங்க, வீதி நெடுகும் பொதுமக்கள் திரண்டு வரவேற்றார்கள்.
மாஞ்சோலை பள்ளி கௌரவ இமாம் பைஸல் மௌலவி அவர்களது அழகிய ரமழான் உபதேசம் பேரணி முடிவை மெருகூட்டியது.
வீதி தோறும் நின்ற சிறுவர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்விக்கப் பட்டார்கள்.
இஸ்லாமிய பாரம்பரியங்களை நினைவூட்டி ரமழானின் மகிமைகளை எடுத்தியம்பியது இந்தப் பேரணி.


















