News

எந்தவொரு வேலையும் செய்யாமல், வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் கொள்ளையிட்டு பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக ஆடம்பரமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடிய நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது #இலங்கை

எந்தவொரு வேலையும் செய்யாமல், வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த சந்தேக நபர் ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல்வேறு அடகு மையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த 8 இலட்சம் ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக ஆடம்பரமாகக் காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், ‘ஐஸ்’ போதைப்பொருளுக்குத் தீவிரமாக அடிமையானவர்.
தனது தினசரி போதைப்பொருள் தேவைக்கான 50,000 ரூபாவைத் திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாகக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிள் மற்றும் 11 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் ஏற்கனவே 08 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button