News
குடிபோதையில், சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய தேரருக்கு 67,500 ரூபா அபராதம் செலுத்துமாறு நீதிமன்றில் உத்தரவு

கண்டி – அம்பிட்டிய வீதியின் பொல்வங்குவ பகுதியில் வேன் ஒன்றினால் மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிபொல தேவரக்கித தேரருக்கு 67,500 ரூபா அபராதம் செலுத்துமாறு கண்டி பிரதான நீதவான் சாமர விக்கிரமநாயக்க உத்தரவிட்டார்.
மதுவருந்திவிட்டு வீதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் விபத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கண்டி தலைமையக பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினரால் இந்த தேரர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவிக்கையில், குறித்த தேரர் செலுத்திய வாகனம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டனர். முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த நீதவான், இந்த அபராதத் தொகையை விதித்தார்.



