News

இலங்கையின் கிராஃபைட் உள்ளிட்ட கனிம வள வர்த்தகத்தில் இறங்க அமெரிக்கா ஆர்வம் !

இலங்கையின் கிராஃபைட் (මිනිරන්) தொழில்துறையில் முதலீடு செய்ய அமெரிக்க தனியார் துறை ஆர்வம்

இலங்கையின் கிராஃபைட் தொழில்துறையை அபிவிருத்தி செய்யவும், அதில் முதலீடு செய்யவும் அமெரிக்காவின் தனியார் துறை விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் கிராஃபைட் தொழில்துறை துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிவதற்காக, மொண்டானா மாநில கூட்டாண்மை திட்டத்தை (Montana State Partnership Program – SPP) பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவினர், அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க அவர்களை சந்தித்துள்ளனர். இந்த தூதுக்குழுவில் SPP பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் கிறிஸ் கோரி, முக்கியமான கனிமங்கள் தொடர்பான நிபுணத்துவம் கொண்ட முன்னணி அமெரிக்க சுரங்க நிறுவனமான Mooney Group LLC இன் நிறுவனர் ஜேம்ஸ் மூனி, அதன் நிர்வாகப் பணிப்பாளர் மேரி மூனி மற்றும் கிறிஸ் டோரிங்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் கிராஃபைட் தொழில்துறையில் முதலீடு செய்யவும், அமெரிக்கா மற்றும் உலகளாவிய சந்தையுடன் இணைவதற்கு தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தவும் இந்த குழுவினர் மிகுந்த ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்த விருப்பத்தை வரவேற்றுள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரங்களைப் பகிர்ந்து கொண்டு இலங்கையின் மිනිරன் தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான இந்த விருப்பமானது, இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியில் இலங்கையை ஒரு முக்கிய இடத்திற்கு கொண்டு வருவதற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என தூதுவர் சுட்டிக்காட்டினார்.

Mooney நிறுவனம் கனிம வளங்களை அடையாளம் காண்பதிலும் மேம்படுத்துவதிலும் – குறிப்பாக செமிகண்டக்டர்கள், பேட்டரிகள் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு முக்கியமான கனிமங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. கனிம அகழ்வு மற்றும் பதப்படுத்துதலில் பெறுமதியை அதிகரிப்பதற்காக, இந்த நிறுவனம் பெரும்பாலும் ஒரு பங்காளியாக மூலோபாய அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.

மேலும், இந்த நிறுவனம் மத்திய ஆசியாவில் தனது வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும், சுரங்க நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான தொழில்முறை நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் மதுக்க விக்ரமாராச்சி, வர்த்தக அமைச்சர் நலிந்த விஜேரத்ன மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் துமிந்து அபேவிக்ரம ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button