News

திருமணமான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கும் இடையில் நிலவிய தகாத உறவு வீடியோ மூலம் அம்பலமானதை அடுத்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படும் காதல் தொடர்பு குறித்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்படுவதற்கு முன்னர் அங்குலான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியுள்ளதுடன், மொரட்டுவை பொலிஸ் குடியிருப்பில் தங்கியிருந்த போதே குறித்த மாணவருடன் இந்த காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். இக்காதல் தொடர்பு மற்றும் அவரது நடத்தை குறித்து சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, சில வாரங்களுக்கு முன்னர் அவர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருமணமானவரான இப்பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மாணவருக்கும் இடையிலான காதல் தொடர்பு வீடியோ காட்சியொன்றின் மூலம் அம்பலமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button