News
கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து 24 வயது பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



