News

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்களும்,  வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களும் அதிகரிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_

சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புகளின்படி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளன. அத்துடன் 2019 ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது என கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதிகளில் சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்புகளின்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டகூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுவது தெரியவந்துள்ளது. இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு தடையாக இருப்பதாகவும் அதேபோன்று அமைதியான தேர்தலுக்கு தடையாக இருப்பதாகவும் கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான மனாஸ் மக்கின் மேலும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களால் வன்முறை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்கள் உருவாகலாம் என கஃபே அமைப்பு எச்சரித்துள்ளது. அத்துடன் வாட்ஸப் குழுமங்ககளிலும், பேஸ்புக் குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான வீடியோ பதிவுகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதேப்போன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர்கள் உள்ளதால் இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதாகவும் ,இவை வன்முறையாக மாறக்கூடும் எனவும் கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான திரு. மனாஸ் மக்கின் அவர்கள், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற பதிவுகள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்வதை தவிர்க்குமாறு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Hasfar A Haleem BSW (Hons)
Journalist



Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button