News
இத்தாலியில் தடை விதிக்கப்பட்ட கிரிக்கட் – மீறி விளையாடினால் 100 யூரோக்கள் வரை அபராதம்
இத்தாலி, மோன்பால்கோன் நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.
இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டி இத்தடையை விதித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட்டுக்காகப் பயன்படுத்தப்படும் பந்துகள் ஆபத்தானவை என்றும், தனது ஊரில் விளையாட்டு மைதானம் அமைக்க தன்னிடம் இடமோ பணமோ இல்லை என்றும் கூறி, தனது ஊரையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட தடையை மீறி விளையாடினால் 100 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.