News
வீதிகளில் வேகத்தை கட்டுப்படுத்த , உபகரணங்களை பெற இலங்கை பொலிஸாருக்கு 50 மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்.
வீதி தொடர்பான வேக வரம்புகள் தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
வீதிகளில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாயை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.