இந்தியாவிடம் டீசல் கோரும் இலங்கை

இலங்கை, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளின் டீசல் விநியோக கோரிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) செய்தியின்படி, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக உள்ளது, குறிப்பாக அதன் அண்டை நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது என்றார்.
வங்கதேசம் டீசல் விநியோகத்தைக் கோரியுள்ளதாகவும், அந்த விஷயம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017 முதல் வங்கதேசத்திற்கான டீசல் ஏற்றுமதி பெரும்பாலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் சுத்திகரிப்பு திறன், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.
இலங்கை மற்றும் மாலத்தீவின் இதே போன்ற கோரிக்கைகளும் இந்தியாவின் எரிசக்தி தேவைகளை மனதில் வைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.



