News

தற்போதுள்ள சூழலில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் உத்தரவாதமளிக்க முடியாது ; இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் கம்பனிகள் கையை விரித்தன..

தற்போதுள்ள சூழலில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் உத்தரவாதமளிக்க முடியாது என இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் கம்பனிகள் கையை விரித்துள்ளதாக முன்னணி சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) முக்கிய உறுப்பினரும் கல்விச் செயலாளரும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்வதற்காக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துள்ள 3 கம்பனிகளும் அரசுக்கு அறிவித்துள்ளது என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீனா தற்போது எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால் சினோபெக் நிறுவனத்தின் விநியோகம் தொடர்பில் உத்தரவாதம் வழங்க முடியாது என கூறிய அவர் இந்தியா ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன நெருக்கடி உருவாகலாம் என அவர் எச்சரிதுள்ளார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக 1000 மெகாவொட் மின்சாரத்தை டீசல் மின் பிரப்பாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் தற்போதுள்ள நிலமையை இது மேலும் மோசமாக்கியுள்ளதாக கூறினார்.

Recent Articles

Back to top button