News
நாட்டைப் பற்றி சிந்தித்து எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும்.. உங்கள் குடும்பத்தைப் பற்றி மட்டும் நினைக்க வேண்டாம்!

எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்யுமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வேண்டுகோள்
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, தமது குடும்பத்தைப் பற்றி மாத்திரமன்றி, நாடு குறித்தும் சிந்தித்து எரிபொருள் பயன்பாட்டை முகாமைத்துவம் செய்யுமாறு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எரிபொருள் நுகர்வு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த தருணத்தில் அனைத்து மக்களிடமிருந்தும் இந்த ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வலியுறுத்தினார்.
தமது வீடுகளில் எரிபொருள் இருப்பு உள்ள காரணத்திற்காக அவற்றை அளவில்லாமல் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டுடனும் மேலாண்மையுடனும் பயன்படுத்துமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.



