ஒரு நாளைக்கு 2 லீட்டர் பெற்றோல் திரும்பவும் போதாது !

முற்சக்கர வண்டி ஓட்டும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தேசிய Taxi App முற்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2 லீட்டர் பெற்றோலில் 50 கிலோமீட்டார் வரை செல்லமுடியும் என சுட்டிக்காட்டியுள்ள குறித்த சங்கம் அதில் 30 கிலோ மீட்டர் வரையே ஹயர் செல்ல முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது எப்களில் கிலோ மீட்டருக்கு 70 ரூபாவே வழங்கப்படுபதாகவும் ஒரு நாளைக்கு 2100 ரூபாவுக்கு ஹயர் செல்ல முடியும் எனவும் அதிக் கம்பனி கமிஷன் 300சென்றால் 1800 ரூபா மிச்சமாகும் எனவும் அந்த அதிலே எரிபொருள் செலவு உள்ளிட்ட செலவுகள் சென்றால் எஞ்சிய பணத்தில் தாம் எவ்வாறு வாழ்வது என அந்த சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
2 மாதங்களுக்கு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் மேலும் சில எரிபொருள் கப்பல்கள் வருவதகாவும் கூறிவிட்டு தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது என தேசிய Taxi App முற்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முற்சக்கர வண்டிகளுக்கு குறைந்தபட்சம் வாரத்திற்கு 35 லீட்டர் பெற்றோல் வழங்க வேண்டும் என தேசிய Taxi App முற்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.



