குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி நெதன்யாஹு உயிரோடு இருந்தால், முழு பலத்துடன் வேட்டையாடிக் கொல்வோம் என ஈரான் இன்று உறுதி அளித்தது

“ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் IV” இன் 53-வது அலைத் தாக்குதலை நடத்துவதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவிப்பு.
ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிராக ‘இஸ்ரேல்’ மற்றும் அமெரிக்காவால் தொடங்கப்பட்ட போர் மூன்றாவது வாரத்தில் நுழையும் நிலையில், தனது “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் IV” இன் 53-வது அலைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
நேதன்யாகுவை “தொடர்ந்து வேட்டையாடிக் கொல்வோம்” என ஈரான் உறுதி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் நீடித்து வரும் நிலையில், உயிருடன் இருந்தால் ‘இஸ்ரேலிய’ பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இலக்கு வைத்து வேட்டையாடி கொல்வோம் என ஈரானின் புரட்சிகர காவற்படை ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்துள்ளது.
“குழந்தைகளைக் கொல்லும் இந்த குற்றவாளி உயிரோடு இருந்தால், முழு பலத்துடன் அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து கொல்வோம்” என்று காவற்படையினர் தங்களது இணையதளமான செபா நியூஸில் (Sepah News) தெரிவித்துள்ளனர்.
ஈரான் மற்றும் லெபனானில் இருந்து ‘இஸ்ரேல்’ நோக்கி
புதிய ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதல்
ஈரான் மற்றும் லெபனானில் இருந்து ‘இஸ்ரேல்’ நோக்கி புதிய ஒருங்கிணைந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் (Fars News Agency) தெரிவித்துள்ளது



