News
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நலமாக இருக்கிறார்.. அவருக்கு எதுவும் ஆகவில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டது

இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காயமடைந்துள்ளார் எனவும் அவர் கொல்லப்பட்டுவிட்டார் எனவும் சில தகவல்கள் பரவின.
நெதன்யாகு இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதைப் போல் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தப் புகைப்படம் ஏஐ உதவியினால் உருவாக்கப்பட்டது எனவும் அவர் காயமடைந்ததற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமுடன் உள்ளார். இது பொய்யான தகவல் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.



