News

இலங்கையில் இன்று பிறை காண்பது சாத்தியமா??
நோன்பு பெருநாள் வெள்ளியா அல்லது சனிகிழமையா?? ( ஒரு விரிவான விளக்கம்)

By : Hasan Badurdeen

பிறை வெற்றுக் கண்களுக்கு தெளிவாகத் தெரிவதற்கு என சில முக்கிய வானியல் நிபந்தனைகள் இருக்கின்றன..

1) பிறையின் வயது…
அமாவாசைக்குப் பிறகு குறைந்தது 18–24 மணி நேரம் கடந்திருக்க வேண்டும். அதற்கு முன் பிறை மிக மிக மெல்லியதாக இருக்கும்.

2) சூரியனிலிருந்து கோண விலகல் (Elongation) 
சந்திரன் மற்றும் சூரியன் இடையிலான கோணம் குறைந்தது 10° அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால், சூரிய ஒளியில் மறைந்து கண்களுக்கு புலப்படாது.

3) சந்திரனின் உயரம் (altitude)…
சூரியன் மறையும் நேரத்தில், குறைந்தது
5°–7° உயரத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில், சந்திரன் விரைவாக மறைந்து கண்களுக்கு புலப்படாது.

4) வானிலை நிலைமை..
மேற்குப் பகுதி வானம் மேகம், தூசி, மூடுபனி இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும்.

இன்றைய இலங்கை நிலை என்ன??👇

1) சந்திரன் இன்னும் மிகவும் இளம் பிறையாக உள்ளது (அமாவாசைக்கு மிக அருகில்) 

2) சூரியனிலிருந்து விலகல் (Elongation) மிக குறைவு எனவே சூரிய ஒளியில் பிறை மறையும் ஆதலால் கண்களுக்கு புலப்படுவது மிகமிக கடினம்..

3) சூரியன் மறைந்ததும், சந்திரனும் விரைவாக மறைந்விடுகிறது just 15 to 20 நிமிடங்கள் வானில் தோன்றும், இதட்கிடையில் தேடிப் பிடிக்க வேண்டும்…

எனவே,
பிறை உருவாகியிருந்தாலும், அது மிகவும் மெல்லியதும் சூரியனுக்கு மிகவும் அருகிலும் இருப்பதால், மாலை வெளிச்சத்தில் அதை வெற்றுக் கண்களால் காண முடியாது என்பதுவே இன்றய நிலை…!!!

Scientifically /கணிப்பின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவோர் வெள்ளிக்கிழமை கொண்டாடலாம்,

ஏனையோர் நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து சனிக்கிழமை கொண்டாடலாம்…

இதற்கு மேலும் இன்டெக்கி பொற கண்டா….
எல்லாருமா சேர்ந்து பெருநாள வெள்ளிக் கிழமையே கொண்டாடிறலாம்….😊🎉

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button