News

அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை



— நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொது மைதானத்தில் இன்று (20) நோன்பு பெருநாள் தொழுகை ஆன்மீக உன்னதத்துடனும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருமளவிலான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டு, நோன்பு பெருநாளை முன்னிட்டு ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தொழுகையில் ஈடுபட்டனர்.

மேலும், சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேய பண்புகளையும் பேணிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்நிகழ்வில் பெருநாள் உரை நிகழ்த்தப்பட்டன.

நிகழ்வின் இறுதியில், நாட்டின் அமைதி, முன்னேற்றம் மற்றும் அனைத்து மக்களினதும் நலனுக்காக சிறப்பு துஆக்கள் இடம்பெற்றன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button