ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை நேற்று (07) அக்கரைப்பற்றில் ஆரம்பமானது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை நேற்று (07) அக்கரைப்பற்றில் ஆரம்பமானது.
இதன் முதற்கட்டமாக, தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவின் அக்கரைப்பற்று பட்டின ஜூம்ஆ பள்ளிவாசலில் வைத்து துஆ பிரார்தனைகளுடன் இப்பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நாடு படுபாதாளத்தில் இருந்த போது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கு முழு முயற்சியுடன் தன்னை அர்ப்பணித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இத்தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கு அக்கரைப்பற்று பிராந்திய மக்கள் இப்பணியை நன்றிக்கடனுக்காக செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா துஆ பிரார்த்தனையின் போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை, அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.றாசீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அதாஉல்லா எம்.பி தலைமையில் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கள் என்பன தற்போது நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.