News

இஸ்ரேல் மீது மிக வலுவான தாக்குதல் நடத்தப்படும் – யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அறிவிப்பு

இஸ்ரேல் – ஈரான் மோதலின் 28வது நாளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், யாஸ்டில் (Yazd) உள்ள யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு “கடுமையான விலையை கொடுக்க நேரிடும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.


யுரேனியம் செறிவூட்டலுடன் தொடர்புடைய ஒரு நிலையத்தை இலக்கு வைத்ததை இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது,

அதே நேரத்தில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு கசிவுகளோ ஏற்படவில்லை என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு ஏவுகணை விழுந்தது, ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கோண்டாப் (Khondab) கனநீர் வளாகம் மற்றும் குசெஸ்தான் (Khuzestan), இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் உள்ள முக்கிய எஃகு ஆலைகளையும் தாக்கிய பரந்த அளவிலான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் அமைந்தன.


அணுசக்தி மற்றும் கைத்தொழில் உள்கட்டமைப்புகள் மீதான இந்தத் தாக்குதல்களைக் கண்டித்த வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று சமிக்ஞை செய்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button