மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க – இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்படும் ..

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக, ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீதான குண்டுவீச்சுச் சம்பவங்களை அமெரிக்கா கண்டிக்க வேண்டும்.
இந்தக் கண்டனம் மார்ச் 30-ஆம் தேதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளதாக அந்த ஊடக அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.



