ஈரானுக்கு எதிரான தரைவழிப் போர் நடவடிக்கைக்கு தயாராகும் பென்டகன்

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பென்டகன் தயாராகி வருவதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது பல வாரங்களாக நீடிக்கும் ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான போர்த் திட்டங்களை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் (Pentagon) தயாரித்து முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
ஏற்கனவே சுமார் 4,000 மெரைன் (Marine) படையினர் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அத்துடன், 82-வது வான்வழிப் பிரிவின் (82nd Airborne Division) வான்குடை வீரர்களும் (Paratroopers) இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



