News

இரவில் மின்விளக்குகளை அணைப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று முதல்..

‘சுரகிமு லங்கா’ (இலங்கையைப் பாதுகாப்போம்) விசேட திட்டம் ஆரம்பம்

உள்நாட்டு மின்சார நுகர்வை 25% ஆல் கட்டுப்படுத்தும் பாரிய இலக்குடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘சுரகிமு லங்கா’ விசேட திட்டம் இன்று (29) முதல் ஆரம்பமாகிறது.

இத்திட்டம் ஜனாதிபதி செயலகம், மின்சக்தி அமைச்சு மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் ஒரு கூட்டு வேலைத்திட்டமாகும்.

முக்கிய நோக்கங்கள்:

• தினசரி மாலை 06 மணி முதல் இரவு 10 மணி வரை பதிவாகும் அதிகப்படியான மின்சாரத் தேவையை (Peak Demand) கட்டுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

• மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் காலப்பகுதிகளைத் தவிர்த்து, ஏனைய நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களைத் தூண்டுவது இதன் மூலம் முன்னெடுக்கப்படும்.

• மின்சாரப் பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய முறைகளை மாற்றி, ஒரு புதிய ஆற்றல் சேமிப்பு கலாசாரத்தை உருவாக்குவது இதன் எதிர்பார்ப்பாகும்.

Recent Articles

Back to top button