உயிர்த்த ஞாயிறு ப*யங்கரவாதத் தா*க்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பதை இன்று இன்று ஆய்வு நூல் மூலம் அறிவிப்பேன்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பதை இன்றைய தினம் (31) நாட்டுக்கு வெளிப்படுத்துவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த (16) ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சட்டத்தரணி உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.
உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டதாவது:
“அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பதை மார்ச் மாதம் (31) ஆம் திகதி வெளிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
ஒன்றரை வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட கடினமான ஆய்வின் பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ‘ சூத்திரதாரியைத் தேடி என்ற பெயரில் ஆய்வு நூல் ஒன்றை நாங்கள் தயாரித்துள்ளோம்.
அந்த ஆய்வு நூலை மார்ச் (31) ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு சம்புத்தத்வ ஜயந்தி மந்திரத்தில் வெளியிட நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”



