92 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிலையாகப் பேண அரசாங்கம் தீர்மானித்தது… உலகச் சந்தை அழுத்தங்களுக்கு மத்தியிலும் எரிபொருள் விலைகளை மலிவாக வைத்திருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்

92 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிலையாகப் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி விலை அதிகரிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மேலதிக வரி செலுத்த வேண்டும். – ஜனாதிபதியின் விசேட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 92 ரக பெட்ரோலுக்கு லீற்றருக்கு 20 ரூபாயும், ஓட்டோ டீசலுக்கு லீற்றருக்கு 100 ரூபாயும் விநியோகஸ்தர்கள் செலுத்த வேண்டும்.
பொதுப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகளை நிலையாகப் பேணுவதன் மூலம், உலகச் சந்தை அழுத்தங்களுக்கு மத்தியிலும் எரிபொருள் விலைகளை மலிவாக வைத்திருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



