இங்கிலாந்து பாராளுமன்றில் கௌரவிக்கப்பட்ட Dr. Fazul Jiffry

இங்கிலாந்து பாராளுமன்றில் கௌரவிக்கப்பட்ட Dr. Fazul Jiffry
இர்ஸாத் இமாமுதீன்
ஐக்கிய இராச்சியத்தின் England பாரளுமன்றத்தில் (*House of Lord -UK-Parliament-London*) கலாநிதி பட்டம் (PhD Doctorate Degree) பெற்றார் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி
மள்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியின் பழைய மாணவரும் தொழிலதிபரும் சமூக சேவையாளருமான கலாநிதி பசூல் ஜிப்ரி சனிக்கிழமை (28) இங்கிலாந்து பாரளுமன்றில் (*House of Lord -UK-Parliament-London*) இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது கலாநிதி பட்டம் *(PhD Doctorate Degree)* வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
இவ்வாறு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உலக அளவில் மிக முக்கியமானவர்களே கௌரவிக்கப்படுகின்றனர். இதன் போது உலக அளவில் ஆய்வுகளை மேற்கொண்ட 150 பேர் பல நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு அவர்களுள் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி அவர்களும் தெரிவு செய்யப்பட்டு PhD Doctorate Degree வழங்கி கௌரவிக்கப்பட்டார்
குறித்த ஆய்வானது *THESIS ON* CLIMATE CHANGE & HUMAN RESPONSIBILITY
என்ற தலைப்பில் அமைந்திருந்தது விசேட அம்சமாகும்.
இவரது சமூகப்பணிகளுக்காக உலகலாவிய ரீதியில் பல்வேறு கௌரவ விருதுகளை பெற்றுள்ளார்
மள்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் கல்வியை ஆரம்பித்து யாழ்ப்பாண மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர்ந்து ஒரு பட்டயக்கணக்காளராக சிங்கப்பூரில் தனது பயணத்தை ஆரம்பித்து தனது உழைப்பு மற்றும் முயற்சியால் சர்வதேசம் போற்றும் ஒரு வர்த்தகராக உயர்ந்தார் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்த்திரேலியா நாடுகளில் வசித்து வரும் அவர் பல்வேறு நிறுவனங்களின் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்.
ஸஹரா நிதியம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உலகலாவிய ரீதியில் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் சமூகப்பணிகளையும் செய்து வருகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது .

